செப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

வெறிநாய் கடித்து 11 ஆடுகள் பலி

ஆனால் நேற்று இரவு தனது கொட்டகையின் அருகே உள்ள மரத்தில் இருந்த தேன் கூடு காற்றில் கலைந்து தேனீக்கள் பறந்து ஆடுகளை கடிக்கும் என்பதால் தனது உறவினர் ஒருவர் கொட்டகையில் ஆடுகளை கட்டியிருந்தார்.இந்நிலையில் இன்று காலை அவர் சென்று பார்த்தபோது 11 ஆடுகளும் வெறி நாய் கடித்து

Updated On :21 ஏப்ரல் 2013, 2:40 pm IST

துறையூர் விநாயகர் தெருவைச் சேர்ந்தவர் அடைக்கன் மனைவி மருதாயி (65) தனது 11 ஆடுகளையும் நெசவாளர் காலணி அருகே உள்ள தனது கொட்டைகையில் அடைத்து வைத்திருந்தார்.

ஆனால் நேற்று இரவு தனது கொட்டகையின் அருகே உள்ள மரத்தில் இருந்த தேன் கூடு காற்றில் கலைந்து தேனீக்கள் பறந்து ஆடுகளை கடிக்கும் என்பதால் தனது உறவினர் ஒருவர் கொட்டகையில் ஆடுகளை கட்டியிருந்தார்.இந்நிலையில் இன்று காலை அவர் சென்று பார்த்தபோது 11 ஆடுகளும் வெறி நாய் கடித்து இறந்து கிடந்தன. இது பற்றி மருதாயி கூறியபோது கொட்டகையின் அருகே கோழி கழிவுகளையும் கொட்டியிருந்ததால் வெறிநாய்கள் அடிக்கடி கழிவுகளை உண்ண கூட்டம் கூட்டமாக வருவதாகவும் இதனால் நேற்று இரவு கழிவுகளை உண்ண வந்த நாய்கள் கூட்டம் கொட்டகையில் உள்ள ஆடுகளை வேட்டையாடி சென்றதாக கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.