விழுப்புத்தில் கைது செய்யப்பட்ட பாமக கட்சியினர் 200 பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள்கட்சியினர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி பாமக சார்பில் செவ்வாய்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்யமுயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியினர் 520 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களி்ல் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய பலர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பாதுகாப்பு கருதி அவர்களில் 200 பேர் கோவை மத்திய சிறைக்கு இன்று கொண்டுவரப்பட்டனர்.
கோவை மத்திய சிறையில் அவர்களுக்கென தனி விசாரணைக் கைதிகளுக்கான பிளாக் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர் என்று கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்

தனியாா்மயமாக்கல் திட்டத்துக்கு அரசு புத்துயிா் அளிக்க வேண்டும்: நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா்அரவிந்த் பனகாரியா

முனம்பம் நில விவகாரம்: கேரள வக்ஃப் வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்






