நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

17 நாட்களாக உயிர் போராட்டம் : வங்கதேச பெண் கண்ணீர் பேட்டி

வங்கதேச கட்டட விபத்தில் சிக்கி 17 நாட்களாக உயிருக்குப் போராடி வந்த பெண் ரேஷ்மி தனது அனுபவத்தை கண்ணீர் மல்கக் கூறினார்.

News image
Updated On :11 மே 2013, 12:14 pm IST

வங்கதேச கட்டட விபத்தில் சிக்கி 17 நாட்களாக உயிருக்குப் போராடி வந்த பெண் ரேஷ்மி தனது அனுபவத்தை கண்ணீர் மல்கக் கூறினார்.

வங்கதேச தலைநகர் டாக்காவில் 8 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இரண்டாயிருத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலர் இன்னமும் காணவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், கட்டட இடிபாடுகளை அகற்றும் போது, நேற்று ரேஷ்மி என்ற பெண் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார். உடனடியாக அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் இருந்தவாறு, அவர் கடந்த 17 நாட்களை எவ்வாறு கழித்தார் என்பதை கண்ணீர் மல்கக் கூறினார்.

அதில், கட்டடம் இடிந்து விழும் போது, ஒரு மிகப்பெரிய தூண் அருகே நான் நின்றிருந்தேன். தூணுக்கும், மேல்தள பீமுக்கும் இடையே நான் மாட்டிக் கொண்டதால், எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. நான் சிக்கிக் கொண்ட இடத்தின் அருகில் இருந்த காய்ந்து போன உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு உயிர் வாழ்ந்தேன். அருகில் இருந்த தண்ணீரை குடித்து வந்தேன்.  கடைசி இரண்டு நாட்களாக உணவோ, தண்ணீரோ எதுவும்  இல்லாமல் பட்டினிக் கிடந்தேன். தொடர்ந்து மீட்புக் குழுவினருக்கு சத்தம் எழுப்பி வந்தேன். ஆனால் ஒவ்வொரு நாளும் எனது முயற்சி வீணாகி வந்தது.

கடைசியாக நேற்று தான் மீட்புக் குழுவினர் என்னை கவனித்தனர். நான் உயிர் பிழைப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. மறு ஜென்மம் எடுத்தது போன்று உணர்கிறேன் என கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.