வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மிகவும் முக்கியம்: பயிற்சியாளர்

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மிகவும் முக்கியம் என இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

News image

ரோஹித் சர்மா - படம் | ANI

Updated On :16 ஜூன் 2026, 7:56 pm IST

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மிகவும் முக்கியம் என இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பஹுதுலே தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடந்த 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர். அதன் பின், அடுத்த ஆண்டே டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றனர். தற்போது இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர்கள் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மிகவும் முக்கியம் என இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பஹுதுலே தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். அவர் சாம்பியன் கிரிக்கெட்டர். அவரது பேட்டிங் மட்டுமின்றி, அவரது அனுபவம் அணியில் உள்ள வீரர்களுக்கு மட்டுமின்றி கேப்டன் ஷுப்மன் கில்லுக்கும் உதவியாக இருக்கும். ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் அவர் இருப்பது மிக மிக முக்கியம். போட்டியை புரிந்துகொண்டு விளையாடக் கூடியதில் அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் என்றார்.

ரோஹித் சர்மா அவர் விளையாடிய கடந்த நான்கு ஒருநாள் போட்டிகளில் 77 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The Indian team's spin bowling coach has stated that Rohit Sharma is crucial for the Indian ODI team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.