தனியார் நிறுவனங்கள் மூலம் ரயில் பெட்டி தயாரிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்:
1952-ல் தொடங்கப்பட்ட பெரம்பூர் இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) 11,500 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இங்கு தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் பல்வேறு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இங்கு ரூ. 240 கோடியில் 2-வது யூனிட் தொடங்க திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்காமல் முடங்கியுள்ளது.இந்நிலையில் 400 ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கான ஆர்டர், மேற்கு வங்கத்தில் உள்ள 3 தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, ஐ.சி.எப். தொழிலாளர்கள் உழைத்து உருவாக்கிய சுமார் ரூ. 1,500 கோடி மதிப்புள்ள வரைபடங்கள் தனியார் நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம் மட்டுமின்றி சக்கரங்கள், இரும்பு, மின் சாதனங்கள் ஆகியவையும் தரப்படுகின்றன. இவ்வளவுக்குப் பிறகும் ஒவ்வொரு பெட்டிக்கும் பெரம்பூரில் உற்பத்தியாகும் அடக்க விலையைவிட ரூ. 50 லட்சம் அதிகமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 400 பெட்டிகளுக்கும் ரூ. 120 கோடி அதிகமாக தர வேண்டியிருக்கும்.
அரசின் இந்த முடிவால் பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையை மூடும் நிலை ஏற்படும். எனவே, தனியாரிடம் 400 பெட்டிகள் தயாரிப்பை ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும். பெரம்பூர் ஐ.சி.எப்பில் திட்டமிட்டபடி 2-வது யூனிட்டை தொடங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இத்தாலி வரைக்கும் சென்ற லக்ஷ்மி அம்மாள், நரோடா ஆடியோ..! வைரலாகும் ஜுவென்டஸ் அணியின் ரீல்ஸ்!

விஜய் பிறந்த நாள் விழாவில்...

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரயில்வேயில் 6,565 டெக்னீசியன் பணிகள்!

தமிழ்நாட்டில் இன்று 18, நாளை 5 மாவட்டங்களில் கனமழை!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


