/

யேமனில் அல் காய்தா பயங்கரவாதிகள் 7 பேர் சாவு

யேமனில் அபியான் மாகாணத்தில் உள்ள மக்ஃபாதில் அல் காய்தா பயங்கரவாதிகள் முகாம் அமைத்து செயல்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் யேமன் அரசுப் படையினர் இன்று நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். இந்த 8 பேரும் மக்ஃபாத் பகுதியில் வாகனம் ஒன்றில்

Updated On :1 ஜூன் 2013, 12:12 pm

யேமனில் அரசுப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் அல் காய்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.

யேமனில் அபியான் மாகாணத்தில் உள்ள மக்ஃபாதில் அல் காய்தா பயங்கரவாதிகள் முகாம் அமைத்து செயல்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் யேமன் அரசுப் படையினர் இன்று நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். இந்த 8 பேரும் மக்ஃபாத் பகுதியில் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மக்ஃபாத் பகுதியை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்த அல் காய்தாவினரை விரட்டியடிக்க 2012 மே மாதத்திலிருந்து யேமன் அரசு தாக்குதலை நடத்தி வருகிறது. யேமனின் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது. அப்பிராந்தியத்தில் அல் காய்தா பயங்கரவாதிகள் என சந்தேகப்படுவோர் மீது அவ்வப்போது அமெரிக்கா ஆளில்லா விமானத் தாக்குதலையும் நிகழ்த்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.