/

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்தியா 106/1

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணியும்,மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு

Updated On :11 ஜூன் 2013, 8:38 pm IST

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணியும்,மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழந்து 233 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 60 எடுத்தார். இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியுள்ள இந்திய அணி 16 ஓஅவ்ர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.கோலி  4 ரன்களும், தவான் 47 ரன்கள் எடுத்தும் விளையாடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.