மந்தைவெளியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து நோயாளி ஒருவர் இன்று காலை தற்கொலை செய்து கொண்டார்.
மந்தைவெளி சோலையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேணுகோபால் (60). பூ வியாபாரியான அவர் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக மந்தைவெளியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூன் 6-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பரிசோதனை முடிவில் அவருக்கு காசநோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனராம்.
இதனைக் கேட்டத்தில் இருந்து வேணுகோபால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் மருத்துவமனையின் 3-வது மாடிக்கு இன்று காலை சுமார் 7 மணியளவில் சென்ற வேணுகோபால், அங்கிருந்து கீழே குதித்து விட்டாராம்.இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்ட மருத்துவமனை ஊழியர்கள், அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு: மாணவர்களுக்கு ரூ. 25,000 ஊக்கத்தொகை!

நூதன விழிப்புணர்வு! தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு 1 கிலோ தக்காளி!
ஈரான் அமைதி ஒப்பந்தம்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா?
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech


