ஆஸ்திரேலியாவில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர ஹோட்டல் உரிமையாளரை சில இளைஞர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அருகில் உள்ள பலாரட் நகரில் இந்தியாவைச் சேரந்த ஹிமான்ஷு கோயல் (22) என்பவர் நட்சத்திர ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலுக்கு வெள்ளிக்கிழமை இரவு (உள்ளூர் நேரப்படி) 9.30 மணிக்கு ?எட்டு இளைஞர்கள் வந்தனர். அவர்கள் ஹிமான்ஷுவை மட்டமான வார்த்தைகளால் திட்டினர். இனவெறி ரீதியிலும் அவர்கள் வசைபாடினர். அவர்களில் ஓர் இளைஞர் திடீரென்று ஹிமான்ஷுவின் முகத்தில் ஓங்கிக் குத்தினார். மற்றவர்களும் அவரைத் தாக்கினர்.இந்தச் சம்பவம் தொடர்பாக ஹிமான்ஷு உடனடியாக பலாரட் போலீஸில் புகார் செய்தனர். இது தொடர்பாக விசாரித்து வரும் போலீஸார், தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண்பதற்காக கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள படங்களைப் பரிசீலித்து வருவதாகவும் விரைவில் அவர்களைப்பிடித்து விடுவார்கள் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, தாக்குதலில் காயமடைந்த ஹிமான்ஷு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது முகத்தில், குறிப்பாக கன்னப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இன்னும் 6 வாரங்களுக்குச் சாப்பிட முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரை பலாரட் நகர மேயர் ஜான் பர்ட் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எபோலா பரவல்! காங்கோவில் பலி எண்ணிக்கை 200-ஐ கடந்தது!

ஒருநாள் போட்டிகளில் இஷான் கிஷன் புதிய சாதனை!

டி.கே. சிவகுமார் தலைமையில் அமோக வெற்றி.. கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!!

அமைதி ஒப்பந்தம்! சுவிட்சர்லாந்தில் நாளை அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் நேரில் சந்திப்பு!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


