கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

தொழில்நுட்பக் கோளாறு : தில்லி மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

தில்லி மெட்ரோ ரயில் சேவையில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட தொழிலநுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

News image
Updated On :11 ஜூன் 2013, 12:38 pm IST

தில்லி மெட்ரோ ரயில் சேவையில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட தொழிலநுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

இன்று காலை 9.45 மணியளவில், மெட்ரோ ரயில் ஒன்று தலைமைச் செயலகம் மற்றும் உத்யோக் பவன் ரயில் நிலையங்களுக்கு இடையிலான சுரங்கப் பாதையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு நின்றது. அதில் இருந்த பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டனர்.

தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய சில மணி நேரங்கள் ஆகும் என்பதால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதன்பிறகு வந்து கொண்டிருந்த மெட்ரோ ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், ரயிலுக்குள் ஏராளமான பயணிகள் எந்த தகவலும் இல்லாமல், பல மணி நேரம் சிக்கிக் கொண்டனர்.

2 மணி நேரத்துக்கும் மேலாக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், அதில் பயணிக்கும் பயணிகள் பலரும் இன்று பாதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.