கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டு

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 2 ஜெட் போர் விமானங்கள், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பாக்பத்தன் மாவட்டத்தில் உள்ள ஹெட்சுலேமான்கி என்ற இடம்வரை அத்துமீறி நுழைந்துள்ளது. எல்லைக்

Updated On :11 ஜூன் 2013, 4:09 pm IST

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண வான்வெளியில் இந்திய ஜெட் போர் விமானங்கள் இன்று அத்துமீறி நுழைந்ததாக அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை குற்றம் சாட்டியுள்ளது.  இதை இந்திய விமானப் படை மறுத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 2 ஜெட் போர் விமானங்கள், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பாக்பத்தன் மாவட்டத்தில் உள்ள ஹெட்சுலேமான்கி என்ற இடம்வரை அத்துமீறி நுழைந்துள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து 7 கி.மீ. வரை இந்திய விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளன. சுமார் ஒரு நிமிடம் வரை பாகிஸ்தான் பகுதியில் இருந்த அந்த இரு விமானங்களும், பின்னர் இந்தியப் பகுதிக்கு திரும்பிச் சென்றன. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட் பகுதிக்கு போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப் படை அனுப்பிவைத்தது என்றார்.

இத்தகவலை ஜியோ நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.ஆனால், இதை மறுத்துள்ள இந்திய விமானப் படை அதிகாரிகள், போர் விமானங்கள் எதுவும் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழையவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.