மீன் வள மேம்பாட்டு திட்டங்களுக்காக நபார்டு வங்கி ரூ.10 கோடி நிதியளிக்க உள்ளது.
இது குறித்து மீன்வளத் துறை அதிகாரி கூறியதாவது, மீன் வளத் துறைக்கு நபார்டு வங்கி அளிக்க உள்ள ரூ.10 கோடியை, பவானிசாகர் பகுதியில் மீன் வளர்ப்பு டேங்குகள் கட்ட பயன்படுத்தப்படும். ஏற்கனவே உள்ள மீன் டேங்குகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300 டன் மீன்கள் கிடைக்கின்றன. ஜூன்-ஜூலை மாதங்களில் இந்த டேங்கில் ஜிலேபி, ரோகு, கட்லா போன்ற மீன் வகைகளை விடுவோம். பருவ மழை துவங்கி மழை நீர் கிடைத்ததும், இங்கு மீன்கள் நன்கு வளர்ந்து, அவை ஒப்பந்ததாரர்களுக்கு விடப்படும். ஏற்கனவே இதுபோன்ற சில டேங்குகள் பவானிசாகர் பகுதியில் உள்ளன. இந்த நிதியைக் கொண்டு மேலும் டேங்குகள் அமைப்பதன் மூலம், கிடைக்கும் மீன்களின் எண்ணிக்கையை 50 லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மீன் வளத் துறை சார்பில் ஆராய்ச்சி மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எபோலா பரவல்! காங்கோவில் பலி எண்ணிக்கை 200-ஐ கடந்தது!

ஒருநாள் போட்டிகளில் இஷான் கிஷன் புதிய சாதனை!

டி.கே. சிவகுமார் தலைமையில் அமோக வெற்றி.. கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!!

அமைதி ஒப்பந்தம்! சுவிட்சர்லாந்தில் நாளை அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் நேரில் சந்திப்பு!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


