தெலங்கானா விவகாரத்தில் அனைத்து தரப்பையும் திருப்திப்படுத்தும் வகையில் மத்திய அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்று ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் தெரிவித்துள்ளார்.இன்று செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
தெலங்கானா விவகாரத்தில் அனைத்துத் தரப்பையும் திருப்திப்படுத்தும் வகையில் தீர்வு காண மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அனைவரிடமும் புரிதலையும், ஒப்புதலையும் ஏற்படுத்தும் பணியில் அவர்கள் (மத்திய அரசு) ஈடுபட்டுள்ளனர் என்றார். இந்த நிலையில், ஆந்திர மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள திக்விஜய் சிங் அம்மாநிலத்துக்கு வந்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் நரசிம்மன் கூறுகையில், "அவர் (திக்விஜய் சிங்) அனைத்து தரப்பையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர், இறுதி அறிக்கையைத் தயார் செய்து உயர்நிலைக் குழுவிடமும், மத்திய அரசிடமும் அளிக்க உள்ளார். அவர்கள் இந்தத் தெலங்கானா விவகாரத்துக்குத் தீர்வு காண முயற்சி செய்வார்கள். இந்த விவகாரத்தில் பல்வேறு விஷயங்களையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது' என்றும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

