முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

தெலங்கானா விவகாரத்தில் மத்திய அரசு விரைவில் முடிவு: ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன்

தெலங்கானா விவகாரத்தில் அனைத்துத் தரப்பையும் திருப்திப்படுத்தும் வகையில் தீர்வு காண மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அனைவரிடமும் புரிதலையும், ஒப்புதலையும் ஏற்படுத்தும் பணியில் அவர்கள்

Updated On :1 ஜூலை 2013, 8:10 pm IST

தெலங்கானா விவகாரத்தில் அனைத்து தரப்பையும் திருப்திப்படுத்தும் வகையில் மத்திய அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்று ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் தெரிவித்துள்ளார்.இன்று செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

தெலங்கானா விவகாரத்தில் அனைத்துத் தரப்பையும் திருப்திப்படுத்தும் வகையில் தீர்வு காண மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அனைவரிடமும் புரிதலையும், ஒப்புதலையும் ஏற்படுத்தும் பணியில் அவர்கள் (மத்திய அரசு) ஈடுபட்டுள்ளனர் என்றார். இந்த நிலையில், ஆந்திர மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள திக்விஜய் சிங் அம்மாநிலத்துக்கு வந்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் நரசிம்மன் கூறுகையில், "அவர் (திக்விஜய் சிங்) அனைத்து தரப்பையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர், இறுதி அறிக்கையைத் தயார் செய்து உயர்நிலைக் குழுவிடமும், மத்திய அரசிடமும் அளிக்க உள்ளார். அவர்கள் இந்தத் தெலங்கானா விவகாரத்துக்குத் தீர்வு காண முயற்சி செய்வார்கள். இந்த விவகாரத்தில் பல்வேறு விஷயங்களையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது' என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.