திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

கோதாவரியில் வெள்ளப் பெருக்கு: ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றம்

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கோதாவரி நதிக்கரையில் வசிப்பவர்களுக்கு சனிக்கிழமை இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கோதாவரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், ஏற்கெனவே

Updated On :21 ஜூலை 2013, 9:54 am

ஆந்திரத்தில் கோதாவரி நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் 1,300 பேர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கோதாவரி நதிக்கரையில் வசிப்பவர்களுக்கு சனிக்கிழமை இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கோதாவரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், ஏற்கெனவே பல இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் நீது குமார் பிரசாத் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.

தொடர்ந்து கன மழை பெய்து வருவதன் காரணமாக கோதாவரி நதியில் வெள்ளம் கரை புரண்டு ஒடுகிறது. சில இடங்களில் நதி நீர் கரையைக் கடந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நிதியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால், பாதிப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.கோதவரியின் துணை நதிகளான கெüதமி, வசிஷ்டா கோதாவரி உள்ளிட்ட நதிகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கோனாசீமாவில் 700 பேரும், தேவிப்பட்டிணத்தில் 600 பேரும் மறுவாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நதி நீர் சூழ்ந்துள்ள பகுதியில் சிக்கியுள்ளவர்களை படகுகளில் சென்று மீட்கும் பணியும், நிவாரண உதவிகளை வழங்கும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். தேவிப்பட்டிணம் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.