சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

போலீஸாக நடித்து மூதாட்டியிடம் நகை கொள்ளை

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவரது மனைவி பானுமதி (60). இவர் சனிக்கிழமை மாலை முத்து மாரியம்மன் கோயிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

Updated On :21 ஜூலை 2013, 2:18 pm

புதுச்சேரியில் போலீஸாக நடித்து மூதாட்டியிடம் 3 பவுன் தங்க நகையைத் திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவரது மனைவி பானுமதி (60). இவர் சனிக்கிழமை மாலை முத்து மாரியம்மன் கோயிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது,  இரு சக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் பானுமதியை வழிமறித்தனர். அவரிடம், தாங்கள் போலீஸ்காரர்கள் என்றும்,  நகை பறிக்கும் கும்பல் அதிகமாக நடமாடுவதால் கழுத்தில் நகை எதுவும் அணிந்து கொள்ள வேண்டாம். நகையை கழற்றி பத்திரமாக பையில் வைத்து கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.பானுமதிக்கு உதவுவதாகக் கூறி, அவரிடம் இருந்து 3 பவுன் தங்கச் சங்கிலியை வாங்கி, பேப்பரில் பொட்டலமாக மடித்துக் கொடுத்துள்ளனர்.பானுமதி வீட்டுக்கு வந்து பொட்டலத்தை பிரித்து பார்த்த போது, அதில் சிறுசிறு கற்கள் மட்டுமே இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து பெரியக்கடை போலீஸர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.