சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

பாஜக பொதுச்செயலாளர் படுகொலை: கருணாநிதி கண்டனம்

பாஜகவின் பொதுச்செயலாளர் வி.ரமேஷ், சேலத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்தப் படுகொலையை திமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.ரமேஷ் குடும்பத்தினருக்கும், பாஜகவினருக்கும்

News image
Updated On :21 ஜூலை 2013, 8:24 pm IST

பாஜகவின் மாநிலப் பொதுச்செயலாளர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாஜகவின் பொதுச்செயலாளர் வி.ரமேஷ், சேலத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்தப் படுகொலையை திமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.ரமேஷ் குடும்பத்தினருக்கும், பாஜகவினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.அரசியல் கொலைகள் தொடர்ந்துகொண்டே போகின்றன.கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் 6 பேர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

2012-ம் ஆண்டில் பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினர் புகழேந்தியும், வேலூரில் பாஜக மருத்துவ அணி மாநிலச் செயலாளர் அரவிந்த் ரெட்டியும், 2013-ம் ஆண்டில் பரமக்குடி நகராட்சி பாஜக முன்னாள் கவுன்சிலர் முருகன், வேலூர் ஹிந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன், ராமேஸ்வரத்தில் ஹிந்து முன்னணி செயலாளர் குட்டநம்பு, தற்போது ரமேஷும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.நாகர்கோவில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.காந்தி, மேட்டுப்பாளையத்தில் ஆர்.எஸ்.எஸ். மாவட்டச் செயலாளர் ஆனந்த், ஊட்டியில் ஹிந்து முன்னணி நிர்வாகி ஹரி ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டு உயிர் பிழைத்துள்ளனர்.

திருச்சியில் ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டு எத்தனையோ மாதங்கள் ஆகிவிட்டன.தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதற்கோ, நடவடிக்கை எடுப்பதற்கோ ஆட்சியாளர்ளுக்கு நேரம் இருப்பதாகத் தெரியவில்லை. நாள்தோறும் கொலைகளும், கொள்ளைகளும், சட்டம் - ஒழுங்கும் தொடர்ந்து சரிந்து கொண்டிருப்பதையே காட்டுவதாகக் கருணாநிதி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.