சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

கரூரில் வழக்குரைஞர்கள் சாலை மறியல்

வழக்குரைஞர் தம்பதியை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளரை பணியிட மாற்றம்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:23 am

வழக்குரைஞர் தம்பதியை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரூரில் வழக்குரைஞர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்துக்கு வழக்கு சம்பந்தமாக கடந்த மாதம் 31-ம்தேதி சென்று விட்டு, வீட்டுக்குத் திரும்பும்போது வழக்குரைஞர் தம்பதியினர் பி.கே.ரவி, உமாதேவியை மற்றொரு தரப்பினர் மிரட்டிச் சென்றார்களாம்.

இதுகுறித்து வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் வழக்குரைஞர்களை மிரட்டியவர்கள் கைது செய்யப்பட்டு, உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்களாம்.

வழக்குரைஞர்கள் தம்பதியினரை மிரட்டியவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்காமல் உடனடியாக ஜாமீனில் விடுவித்த காவல்துறையினரைக் கண்டித்தும், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளரை பணியிடமாற்றம் செய்யக் கோரியும் கரூர் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் கடந்த 14-ம் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை திருச்சி-கரூர் சாலையில் சுங்ககேட் பகுதியில் வழக்குரைஞர் சங்கத் தலைவர் மாரப்பன் தலைமையில் வழக்குரைஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டம் குறித்து தகவலறிந்த கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார் அப்பகுதிக்குச் சென்று வழக்குரைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளருக்கு வேறு பணி வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்குரைஞர்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். தொடர்ந்து மாவட்ட முதன்மை நீதிபதி ஜெயசங்கரனை சந்தித்து தங்களது நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை இன்று முதல் கைவிடுவதாகவும், நாளை வெள்ளிக்கிழமை முதல் நீதிமன்ற பணியில் பங்கேற்க போவதாகவும் வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.