கனடாவில் நடைபெற்ற துருக்கி - ஆஸ்திரேலிய கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-0 என அபார வெற்றியைப் பெற்றது.
துருக்கி அணி முதல்முறையாக 24 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் இடம்பெற்றது. ஆனால், முதல் போட்டியிலேயே துருக்கி அணிக்கு ஆஸ்திரேலியா அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.
இந்தப் போட்டியில் தொடக்கதிலேயே 27ஆவது நிமிஷத்தில் நெஸ்டோரி இரங்குண்டா சிறப்பான கோல் அடித்தார். முதல் பாதியில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியில் கானர் மெட்கால்ஃப் 75ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கோல் கீப்பர் 8 கோல்களை தடுத்து அசத்தினார்.
இந்தப் போட்டியில் துருக்கி அணி 72 சதவிகித பந்தினை தன்வசம் வைத்திருந்த நிலையில் ஆஸ்திரேலியா 28 சதவிகிதமே தன்வசம் வைத்திருந்தது.
இந்தப் போட்டியின் 85ஆவது நிமிஷத்தில் துருக்கி வீரர் யூனுஸ் அக்குனுக்கு யெல்லோ கார்டு வழங்கப்பட்டது. இறுதிவரை போராடிய துருக்கி அணியினால் ஒரு கோல்கூட அடிக்கமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
துருக்கி அணி கடந்த 2002ல் அரையிறுதியில் விளையாடியது. பின்னர், ஐந்து உலகக் கோப்பைகளைத் தவறவிட்டது. ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக ஆறாவது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்கிறது.
Summary
Patrick Beach saved 8 goals and Australia spoils Turkey's return to the World Cup with a 2-0 victory
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை முதல் அரையிறுதி: ஆஸ்திரேலியாவுக்கு 126 ரன்கள் இலக்கு!
தோல்வியே காணாத அணி: பாகிஸ்தானை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா!







