பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

7 மாதங்களுக்கு முன்பு அணியில் இல்லை... அறிமுக உலகக் கோப்பை ஆட்டத்தில் மிரட்டிய ஆஸி. கோல்கீப்பர்!

அறிமுக உலகக் கோப்பையில் சாதனை படைத்த ஆஸி. கோல்கீப்பர் பேட்ரிக் பீச் குறித்து...

Australia's Patrick Beach celebrates after the World Cup Group D soccer match between Australia and Turkey in Vancouver, Canada, Saturday, June 13, 2026. (Darryl Dyck/The Canadian Press via AP)

ஆஸ்திரேலிய கோல்கீப்பர் பேட்ரிக் பீச். - படம்: ஏபி

Published On :

அறிமுக உலகக் கோப்பையில் 8 கோல்களைத் தடுத்து அசத்திய ஆஸ்திரேலியாவின் இளம் கோல்கீப்பர் பேட்ரிக் பீச் தனது கனவு நனவானது எனக் கூறியுள்ளார்.

கனடாவில் நடைபெற்ற துருக்கி - ஆஸ்திரேலியா இடையேயான கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-0 என அபார வெற்றியைப் பெற்றது.

இந்தப் போட்டியில் 22 வயதான ஆஸ்திரேலிய கோல் கீப்பர் 8 கோல்களைத் தடுத்து க்ளீன் ஷீட் பெற்று அசத்தினார். ஏழு மாதத்திற்கு முன்பாக அணியில் தேர்வாகாத இவர் தற்போது உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலிய கால்பந்து வரலாற்றில் இளம் வயதில் கோல்கீப்பராக அணியில் இணைந்த இரண்டாவது வீரராக சாதனை படைத்தார். இவர் மீது அணியின் பயிற்சியாளர் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்.

கடந்த நவ,2025ல் சீனியர் ஆஸ்திரேலிய கால்பந்து அணியில் இணைந்தார். அனுபமிக்க வீரர்கள் மேட்டி ரியான் மற்றும் பாலி (பால் ஓகான்) இருந்தும் இவரையும் அணியில் எடுத்தபோது அனைவரது புருவமும் உயர்ந்தன; பேசுபொருளாகியது.

முதல் போட்டியிலேயே அவரை கோல்கீப்பராக களமிறக்கியதும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இலக்கை நோக்கி அடிக்கப்பட்ட 8 முறையும் அதனைத் தடுத்துள்ளார். இது சாதாரண போட்டி அல்ல; தனது கோல்கீப்பிங்கின் வருகையின் அறிக்கை எனப் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

மெல்போர்ன் சிட்டி அணியில் அசத்திய இவர் போட்டிக்குப் பிறகு, “மேட்டி, பாலி இருவரும் சிறப்பானவர்கள். கடந்த நான்கு, ஐந்து வாரங்களாக நாங்கள் ஒருவரையொருவர் முன்னேற்ற அயராது உழைத்தோம். கோல்கீப்பர் சங்கம் மிகவும் வலுவாக இருக்கிறது.

அற்புதமான ஆட்டம். கனவு நனவானது போலிருக்கிறது. சிறுவனாக இருக்கும்போது நாம் இதைத்தானே நினைத்திருப்போம். உலகக் கோப்பையில் முதல் போட்டியில் நல்ல அணியுடன் இப்படியான வெற்றி என்பது ஆட்டத்தின் உச்சம்” என்றார்.

Summary

Patrick Beach calls starting in Australia’s World Cup opener a dream come true

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.