தென்னிந்தியாவுக்குள் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக வந்த எச்சரிக்கையை அடுத்து ராமேஸ்வரம் கடல் பகுதியில் 6 இந்திய கடலோர காவல் படையின் கப்பல்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.
பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 8 தீவிரவாதிகள் தமிழகத்தில் மதுரை அல்லது மயிலாடுதுறையில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து, பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் வகையில், இந்திய கடலோர காவல் படையின் இரண்டு ஹோபர் கிராப்ட், 2 சிறிய படகுகள், இரண்டு பெரிய படகுகள் ஆகியவை தமிழக கடல் எல்லையில் ரோந்து சுற்றி வருகின்றன.
மேலும், பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் கிடைத்தால் 1093 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு காவல்துறைக்கு தகவல் தரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

12 ஆண்டு தூய்மை இந்தியா திட்டம்... அனைவருக்கும் தரமான சுகாதார சேவை! பிரதமர் மோடி

ஹரி இயக்கத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா?

கூப்பர் கானலி முதல் சதம்..! ஆறுதல் வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா!

டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்துக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நெதர்லாந்து!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


