சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை நிலவரப்படி 111.40 அடியாக உயர்ந்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் தற்போது பலத்த மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணைக்கு வினாடிக்கு 21,340 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 4,700 கன அடி நீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







