வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தின் மீது செவ்வாய்க்கிழமை இரவு வந்து கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் வந்த இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் உயர் தப்பினர்.
ஓசூரைச் சேர்ந்த தனஞ்செயன், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொள்வதற்காக காரில் வந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நேரிட்டுள்ளது.
காரில் திடீரென புகை வருவதைப் பார்த்த தனஞ்செயன், உடனடியாக காரில் இருந்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியே குதித்தார். அவர் வெளியேறிய சிறிது நேரத்திலேயே, கார் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து காரை அப்புறப்படுத்தினர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







