உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பலாத்காரத்துக்கு சட்டப்படி ஆயுள் தண்டனைதான் : குற்றவாளிகள் தரப்பு வாதம்

பலாத்காரத்துக்கு சட்டப்படி ஆயுள் தண்டனை தான் விதிக்கப்பட வேண்டும். மரண தண்டனை என்பது அதிகப்படியான தண்டனை என்று தில்லி மாணவி பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் தரப்பு வழக்குரைஞர் வாதாடினார்.

Updated On :11 செப்டம்பர் 2013, 9:20 am

பலாத்காரத்துக்கு சட்டப்படி ஆயுள் தண்டனை தான் விதிக்கப்பட வேண்டும். மரண தண்டனை என்பது அதிகப்படியான தண்டனை என்று தில்லி மாணவி பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் தரப்பு வழக்குரைஞர் வாதாடினார்.

குற்றவாளிகள் தரப்பில் வாதாடிய வழக்குரைஞர், இவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படுவதன் மூலம், பெண்களுக்கு எதிரான சக்திகளை ஒடுக்குவதாக மத்திய அரசு காட்ட விரும்புகிறது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது. அவர்கள் படிப்பறிவில்லாத இளைஞர்கள். சிலர் மது  போதையில் இருந்துள்ளனர். இவர்கள் திருந்தி வாழ வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கூறினர்.

மேலும், பலாத்கார குற்றத்துக்கு சட்டப்படி ஆயுள் தண்டனைதான் விதிக்கப்பட வேண்டும். மரண தண்டனை என்பது அதிகப்படியான தண்டனையாகும் என்றும் வாதாடினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.