வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஸோபியானில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸோபியானில் இன்று போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.

Updated On :11 செப்டம்பர் 2013, 5:10 pm IST

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸோபியானில் இன்று போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் முகாம் மீது நடந்த தாக்குதலை அடுத்து ஏற்பட்ட மோதலை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 4 பேர் பலியாயினர்.

4 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இன்று ஸோபியானில்  போராட்டம் நடத்தியவர்களை நோக்கி பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அப்பகுதியில் நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்ததை அடுத்து பதற்றம் ஏற்பட்டதால் அந்த மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கடந்த 3 நாட்களாக இருந்த ஊரடங்கு உத்தரவு இன்று காலையில்தான் தளர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.