விருதுநகரில் மாமூல் தர மறுத்த முடிதிருத்துநரின் கடையை அடித்து உடைத்த ரௌடிகள் மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே பாண்டியன் நகரில் கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்தவர் ரெங்கநாதபண்டிதரின் மகன் காமட்சி(28). இவர் விருதுநகர்-மல்லாங்கிணர் சாலையில் தனியார் வளாகத்தில் முடி திருத்தகத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலையில் வழக்கம் போல் கடையை திறந்து வைத்து தொழிலை கவனித்து வந்தார். அப்போது, பாண்டியன் நகரைச் சேர்ந்த பாண்டி(25), அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பாண்டி(27) மற்றும் மணிகண்டன்(26) ஆகிய மூன்று பேரும் கடைக்கு வந்துள்ளனர். அங்கு வந்த அவர்கள் திடீரென கத்தியைக் காட்டி மாமூல் கேட்டுள்ளனர். முடி திருத்துநர் காமட்சி தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மூன்று பேரும் கடையின் கண்ணாடி உள்ளிட்ட பொருள்களை அடித்து நொறுக்கினார்கள்.
இது தொடர்பாக அருகிலுள்ள பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் போலீஸாரிடம் காமட்சி புகார் செய்தார். அதன் பேரில் குறிப்பிட்ட 3 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகா் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்
திருச்சியில் 442 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
நோயற்ற மனிதன்; போரற்ற உலகம்!

திருச்சியில் அதிகரிக்கும் வெப்பம்: அரசு மருத்துமனையில் சிறப்பு வாா்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

