விருதுநகர் அருகே சாமி வழிபாடு நிகழ்ச்சிக்கு சென்ற மனைவியைக் காணவில்லை என கணவர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறியதாவது: விருதுநகர் அருகே சங்கரலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன்(47). இவரது மனைவி மஞ்சு(24). இவர் புதன்கிழமை மாலையில் விருதுநகர் மாரியம்மன் திருக்கோயிலுக்கு வழிபாடு செய்யப் போவதாக கூறிச் சென்றாராம். ஆனால், இதுவரையில் வீடு திரும்பவில்லையாம். இது தொடர்பாக அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் வீடுகளிலும் தேடிப் பார்த்ததில் மஞ்சு பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை. எனவே இது குறித்து ஆமத்தூர் காவல் நிலைய போலீஸாரிடம் ஜெகதீசன் புகார் செய்தார். அதன் பேரி்ல் வழக்கு பதிவு செய்து காணமல் போனவர் குறித்து தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டிற்கு ஒரு சமூக நீதி கோகிலாமணி உருவாக திமுகவிற்கு வாக்களியுங்கள்: கமலஹாசன்
லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

