டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திருமழிசை துணைநகரம் என்னாயிற்று: கருணாநிதி

மதுரையில் தமிழக வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான 586.86 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திருமழிசையில் 311

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:13 am

அரவிந்தன்

திருமழிசையில் துணைக்கோள் நகரம் அமைக்கப்போவதாக 2 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தது என்னவாயிற்று என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வியெழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:-

மதுரையில் தமிழக வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான 586.86 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திருமழிசையில் 311 ஏக்கரில் துணைக்கோள் நகரம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.அந்த அறிவிப்பு என்னவாயிற்று 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. அடிக்கல் நாட்டு விழாகூட நடைபெறவில்லை.2006-ம் ஆண்டு திருமழிசையில் துணைநகரம் அமைக்க திமுக ஆட்சியில்முயற்சிக்கப்பட்டது.அப் பகுதி மக்களும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் துணை நகரம் அமைப்பதற்காக நஞ்செய், புஞ்செய் நிலங்கள் கையகப்படுத்த மாட்டோம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தை அதிமுகவும், இதர கட்சிகளும் எதிர்க்காமல் இருந்திருந்தால் திமுக ஆட்சியிலேயே துணை நகரம் அமைந்திருக்கும்.தற்போது 110-வது விதியின் கீழ் மதுரையில் துணை நகரம் அமையப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதிமுகவின் தோழமைக் கட்சிகள் வரவேற்றுள்ளன.மதுரை துணைநகரமும், திருமழிசை துணை நகரம்போல் காலதாமதமாகிவிடாமல் விரைவில் நடைமுறைக்கு வருகிறதா என்பதைப் பார்ப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.