ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் டிரைவர் மாரடைப்பால் மரணம்

கோபி புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜான்(58). இவர் கோபியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேன் டிரைவராகப் பணியாற்றி வந்தார். இவர் செவ்வாய்க்கிழமை பள்ளி

Updated On :10 ஏப்ரல் 2013, 2:57 pm IST

கோபியில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் டிரைவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

கோபி புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜான்(58). இவர் கோபியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேன் டிரைவராகப் பணியாற்றி வந்தார். இவர் செவ்வாய்க்கிழமை பள்ளி முடிந்ததும் 20 குழந்தைகளுடன் வேனை ஓட்டிக் கொண்டு மொடச்சூர் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஜானுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

உடனயாக, வேனில் இருந்த பெண் உதவியாளரிடம் கூறிவிட்டு, வேனை சாலையோரம் நிறுத்தினார். பின்னர், நெஞ்சுவலி அதிகமாகவே ஸ்டியரிங்கிலேயே படுத்துக் கொண்டார். உடனடியாக ஆம்புலென்ஸ் மூலம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர் வேன் டிரைவர் ஜான் இறந்து விட்டதாக கூறினார்.  உயிர் போகும் நேரத்திலும் குழந்தைகளை காப்பற்றுவதற்காக வேனை பத்திரமாக சாலையோரம் நிறுத்திவிட்டு, தனது உயிரை விட்ட டிரைவர் ஜானை பொதுமக்கள் சோகத்துடன் பார்த்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.