சிதம்பரம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் சாவு!
சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை பெரியஆசன கானாத்தெருவைச் சேர்ந்த ஷேக்மதர் (56). இவர் ஓமத்தண்ணீர் தயாரித்து வியாபாரம் செய்து வருபவர். இந்நிலையில் இவர் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு


சிதம்பரம் அருகே நேற்று(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு ரயிலில் அடிப்பட்டு ஒருவர் இறந்தார்.
சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை பெரியஆசன கானாத்தெருவைச் சேர்ந்த ஷேக்மதர் (56). இவர் ஓமத்தண்ணீர் தயாரித்து வியாபாரம் செய்து வருபவர். இந்நிலையில் இவர் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு பரங்கிப்பேட்டை அருகே கே.பஞ்சங்குப்பம் எனுமிடத்தில் ரயில்வே பாதையில் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத ரயிலில் அடிபட்டு இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் ரயில்வே போலீஸார் இன்று காலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...