இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சிதம்பரம் அருகே வக்கீல் குமாஸ்தா கொலை!

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிபபேட்டை அகரத்தைச் சேர்ந்த ராஜா (37). இவர் வழக்குரைஞர் குமாஸ்தாவாக உள்ளார். இந்நிலையில் இவர் கொலை செய்யப்பட்டு உடல் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சம்மந்தம்

News image
Updated On :16 ஏப்ரல் 2013, 12:26 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே வழக்குரைஞர் குமாஸ்தா கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார். புதைக்கப்பட்ட உடலை போலீஸார் தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிபபேட்டை அகரத்தைச் சேர்ந்த ராஜா (37). இவர் வழக்குரைஞர் குமாஸ்தாவாக உள்ளார். இந்நிலையில் இவர் கொலை செய்யப்பட்டு உடல் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சம்மந்தம் கிராமத்தில் உள்ள ஷேக்அப்துல்லா என்பவரது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்தது இன்று காலை தெரியவந்தது. தகவல் அறிந்த சிதம்பரம் ஏஎஸ்பி எம்.துரை மற்றும் பரங்கிபபேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இறந்து போன ராஜாவிற்கு வள்ளி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். வட்டாட்சியர் விஜயா, ஏஎஸ்பி எம்.துரை ஆகியோர் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மஞ்சக்குழி கிராம நிர்வாக அலுவலர் ரங்கராமானுஜம் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, கடலூரிலிருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ராஜாவை கொலை செய்த குறறவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பரங்கிபபேட்டை அகரம் காலனி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஏஎஸ்பி எம்.துரை மற்றும் போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்ததை அடுத்து மறியலை வாபஸ் பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.