வாரத்திற்கு ஒரு முறை 4 குடம் குடிநீர் விநியோகம்: ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்

இது தொடர்பாக சாத்தூர் சிலோன் காலனி பொதுமக்கள் சார்பில் தலைவர் கருப்பையா ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: சாத்தூருக்கு அருகே உள்ள சிலோன் காலனியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு
Updated on
1 min read

சாத்தூர் அருகே சிலோன் காலனியில் வாரத்திற்கு ஒரு முறை  குடிநீர் விநியோகிப்பதால், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாக கூறி ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

இது தொடர்பாக சாத்தூர் சிலோன் காலனி பொதுமக்கள் சார்பில் தலைவர் கருப்பையா ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: சாத்தூருக்கு அருகே உள்ள சிலோன் காலனியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் 500-குடும்பங்கள் வரையில் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் 4 குடங்கள் மட்டுமே வாரத்திற்கு ஒரு முறை விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நீரை வைத்து ஒரு குடும்பத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள்.

மேலும், தேவைப்படும் குடிநீரை எடுத்து வருவதற்காக அருகில் உள்ள வாழவந்தாள்புரம், சாமியார் காலனி பகுதிக்கு 2 கி.மீ தூரம் வரையில் நடந்து சென்று எடுத்து வரவேண்டியுள்ளது. எனவே தண்ணீர் எடு்ப்பதற்கு செல்வதால் ஒவ்வொரு நாளும் கூலி வேலையும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதை போக்கும் வகையில் சிலோன் காலனியில் குடிநீர் ஆதாரத்தை ஏற்படுத்தும் வகையில் ஆழ்குழாய் அமைத்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி கிராம மக்கள் சார்பில் கருப்பையா ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com