கர்நாடகத்தில் வளர்ச்சிப்பணிகளை செய்த பாஜகவை, காங்கிரஸ் கட்சியினர் தூற்றுவது சரியல்ல என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் சுஸ்மாசுவராஜ் தெரிவித்தார்.
கர்நாடகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலையொட்டி சனிக்கிழமை ஷிமோகா, சிரா உள்ளிட்ட பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியது: கடந்த 5 ஆண்டுகளாக பாஜக மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை நிறைவேற்றியுள்ளது. இதனை பொறுக்க முடியாத காங்கிரஸ் கட்சியினர் பாஜகவை தூற்றி வருகின்றனர். பாஜக ஆட்சியில் விவசாயிகள், மகளிர், இளைஞர்கள் பயன் அடைந்தனர். முறைகேட்டில் மூழ்கி உள்ள காங்கிரஸôர், பாஜகவை குறை கூறுவது, கண்ணாடி வீட்டிலிருந்து கல் எரிவதற்கு சமம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை, நிலக்கரி, காமன்வெல்த் விளையாட்டு ஊழல் ஆகியவை அதற்கு உதாரணம். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. தொழில் வளர்ச்சி திட்டங்கள் இல்லை.
ஆனால் ஆறுகளை இணைக்கும் திட்டம், கைபேசியில் புரட்சி கொண்டு வந்தது ஆகியவை வாஜ்பாய் தலைமையிலான அரசின் சாதனைகளாகும். கர்நாடகத்தில் பாக்கிய லட்சுமி திட்டம், மாணவர்களுக்கு சைக்கிள் திட்டங்கள் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. கர்நாடகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்திய பாஜக அரசை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காலையில் குறைந்த தங்கம் பிற்பகலில் உயர்வு! (ஜூன் 30)

காதலரை அறிமுகப்படுத்திய நடிகை பிரிகிடா!

ஆதார் - மின்னஞ்சல் இணைப்பு இனி இலவசம்! அதனால் பயனென்ன?

இன்றைய செய்திகள் ஜூன் 30 - நேரலை
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |


