நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் வழக்கத்தைவிட கடல் உள்வாங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் இன்று தெரிவித்தனர்.
சாதாரணமாக தரங்கம்பாடி டேனிஷ் கோட்டைக்கு அருகில் வரை கடல் நீர் இருக்கும். ஒவ்வொரு வருடத்திலும் ஆடி மாதங்களில் சாதாரணமாக சில நேரங்களில் கடல் நீர் உள்வாங்கும். ஆனால் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக சுமார் 10 மீட்டர் தூரத்திற்கும் மேலாக கடல் உள்வாங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அண்மைக் காலங்களில் இதுபோல் இருந்ததில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கோட்டைக்கு எதிர்ப்புறம் சிதிலமடைந்த நிலையில் மதில் சுவர் இடிபாடுகளுடன் இருக்கும். பொதுவாக இந்த மதில் சுவர்களை சுற்றி அதிகமான நீர் இருக்கும். இங்கு சுற்றுலா வருவோர் இந்த மதில் சுவர்களின் மேல் ஏறித்தான் நடக்க முடியுமே தவிர கீழே இறங்கி நடக்கமுடியாது. ஆனால் தற்போது சுவரைச் சுற்றிலும் மணல் தெரிகின்றன. மேலும் நீரில் மூழ்கியிருந்த சுவரின் இடிபாடுகளும் தெரிகின்றன. கோட்டையின் எதிர்ப்புறமும் இதுவரை நீர் இருந்த பகுதிகளில் மணல் மேடாகக் காட்சியளிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் விரைவில் இணையும்: அனைத்து இந்திய இமாம் அமைப்பு

மோடிக்கும் ஊடுருவல்காரா்களின் வாக்குகள்: மம்தா தாக்கு

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்த 4 போ் உயிரிழப்பு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

