விருதுநகரில் அசிரியர் தகுதித் தேர்வில் ஒட ஒதுக்கீடு அமுல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகிலந்திய மாணவர் பெமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு இன்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆகிலந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் ஆர்.சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.கணேசமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.டிமிட்ரோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான டி.ராமசாமி, வட்டார செயலாளர் எஸ்.சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இதில், ஆசிரியர் தகுதித் தேர்வை இட ஒதுக்கீடு அடிப்படையில் நிர்ணயம் செய்ய வேண்டும். பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஆங்கில வழிக்கல்வியை கைவிட்டு தமிழ் வழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், வட்டார துணை செயலாளர் காரஸ் மார்க்ஸ் உள்ளிட்ட அகிலந்திய இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

