நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: 10 பேர் மீது வழக்கு

திருவள்ளூரை அடுத்த புட்லூர் சிவன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ராஜ்குமார் (21). பெருமாள்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இதனிடையே, கடந்த

Updated On :5 ஆகஸ்ட் 2013, 6:29 pm IST

திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவரைத் த தாக்கியதாக 10 பேர் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த புட்லூர் சிவன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ராஜ்குமார் (21). பெருமாள்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, புட்லூர் ரயில் நிலையத்தில் பள்ளி மாணவிகளை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் கேலி செய்தனராம். இதனை ராஜ்குமார் தட்டிக் கேட்டுள்ளார். இந்நிலையில், இன்று காலை புட்லூர் ரயில் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்த ராஜ்குமாரை, பொய்யாமொழி, பரணிகுமார் உள்பட 10 பேர் கொண்ட கும்பல் உருட்டுக் கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமார், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் திருவள்ளூர் தாலுகா போலீஸார், இச்சம்பவத்தில் தொடர்புடைய 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.