தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மாவட்ட ஊரக வளர்ச்சி துறையை கண்டித்து துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் மெத்தன போக்கை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர் தொடர் முழக்க

Updated On :5 ஆகஸ்ட் 2013, 12:14 pm

விருதுநகரில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் மெத்தன போக்கை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இச்சங்கத்தின் மாநில ஒங்கிணைப்பாளர் எம்.சக்திவேல் தலைமை வகித்தார். சிவகாசி ஒன்றியத்தின் தலைவர் மகாலிங்கம், செயலாளர் மாரியப்பன், வெம்பக்கோட்டை ஒன்றியத்தின் செயலாளர் முருகன் மற்றும் விருதுநகர் ஒன்றியத்தின் தலைவர் சென்றாயப்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், துப்புரவு தொழிலாளர்களை முழு நேர ஊழியராக்கி மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். பணியிலிருந்து ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு மாத உதவித் தொகை வழங்கவும் மற்றும் பணியின் போது உயிரிழந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ.1.50 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில ஆலோசகர் எல்.ஏ.சகாயம், தமிழ்நாடு ஆதி ஆந்திரா அருந்ததியர் மஹாஜன சபையின் தலைவர் ஜெயபரால் உள்ளிட்ட துப்புரவு தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.