தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

விருதுநகர் அருகே வாகன விபத்தில் பிளஸ்1 மாணவர் சாவு

விருதுநகரை அடுத்த என்.ஜி.ஓ காலனிப் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன். இவர் புதுதில்லியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரவீண்குமார்(16) தனது தாயாருடன் இருந்து

News image
Updated On :5 ஆகஸ்ட் 2013, 10:34 am

விருதுநகர் அருகே பள்ளிக்குச் செல்வதற்காக சாலையில் ஓரமாக  நின்றிருந்த பிளஸ்1 மாணவன் மீது சாலை தடுப்பு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து இன்று உயிரிழந்தார்.

விருதுநகரை அடுத்த என்.ஜி.ஓ காலனிப் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன். இவர் புதுதில்லியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரவீண்குமார்(16) தனது தாயாருடன் இருந்து வருகிறார். அதோடு, பெரியவள்ளிக்குளம் கிராமத்தில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் காலையில் பள்ளிக்கு புறப்பட்டு சென்றாராம்.

அப்போது,  அவரது வீடு அருகே 4 வழிச்சாலையை கடந்து தடுப்புச் சுவர் மீது பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்தாராம். அந்த வழியாக சென்னையில் இருந்து கயத்தாறு நோக்கி விரைவாக வாகனம் சென்றதாம். இதில், எதிர்பாரத விதமாக வாகனம் மோதியதால் சாலை தடுப்பில்(பேரிகாட்) இருந்து சிதறிய இரும்பு துண்டுகள் மாணவரின் தலையில் தாக்கியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்த சம்பவம் அறிந்து வந்த தாயார் வீட்டை விட்டு சாலைக்கு வந்து ஓரமாக நின்றிருந்த மகன் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதது அப்பகுதியில் இருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இது தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.