லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் அருகே மான்கள் கடக்கும் 4 சாலையில் வனத்துறை சார்பில்  எச்சரிக்கை பலகை வைத்து நடவடிக்கை 

விருதுநகர் அருகே இரை தேடி 4 வழிச்சாலையை கடந்து செல்லும் போது அடிக்கடி வாகன விபத்துக்களில் சிக்கி மான்கள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் கண்மாய் பகுதிகளில் வனத்துறை சார்பில் தாற்காலிக தண்ணீர் தொட்டி அமைத்தும், சாலைகளில் எச்சரிக்கை பலகைகளும் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Updated On :7 ஆகஸ்ட் 2013, 6:04 pm

விருதுநகர் அருகே இரை தேடி 4 வழிச்சாலையை கடந்து செல்லும் போது அடிக்கடி வாகன விபத்துக்களில் சிக்கி மான்கள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் கண்மாய் பகுதிகளில் வனத்துறை சார்பில் தாற்காலிக தண்ணீர் தொட்டி அமைத்தும், சாலைகளில் எச்சரிக்கை பலகைகளும் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் அருகே மருளூத்து, பட்டம்புதூர் ஆகிய கண்மாய்களில் புல்வெளி அதிகமாக இருப்பதாலும், மரங்கள் அடத்தியாக இருப்பதாலும் மான்கள் கூட்டமாக வாழ்ந்து வருகிறது. தற்போது, இக்கண்மாய்களில் போதிய மழை இல்லாத நிலையில்  தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே தண்ணீர் மற்றும் இரைதேடி விவசாய பம்ப்செட் தோட்டங்களுக்கு செல்வதற்காக 4 வழிச்சாலையை கடக்கும் போது விரைவாக வரும் வாகனங்களில் சிக்கி மான்கள் உயிரிழந்து விடுகிறது. கடந்த ஜூலை 29-ம் தேதி முதல் ஆக.6-ம் தேதி வரையில் 1 ஆண்மானும், 4 பெண்மான்களும் உயிரிழந்து உள்ளன. அதற்கு முன்பாகவும் இதுபோன்ற விபத்துக்களில் சிக்கி 10-க்கும் மேற்பட்ட மான்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    எனவே இந்த உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் மண்டல பாதுகாப்பு வன அலுவலர் அஸிஷ்குமார் ஸ்ரீவத்ஸவா தலைமையில் அதிகாரிகள் இக்குறிப்பிட்ட கிராமங்களில் உள்ள கண்மாய் பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது, அப்பகுதிகளில் மான்கள் அதிகம் நடமாடுவது தெரியவந்தது. அதையடுத்து, தாற்காலிக நடவடிக்கையாக நான்கு வழிச்சாலையில் வாகனம் ஓட்டிச் செல்கிறவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இது மான்கள் நடமாடும் பகுதி 30 கி.மீ வேகத்தில் செல்லும் அறிவுறுறுத்தும் வகையில் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இங்குள்ள மருளூத்து, பட்டம்புதூர் கண்மாய்களிலும் தாற்காலிகமாக 3 குடிநீர் தொட்டிகள் ஏற்படுத்தப்பட்டு தண்ணீர் டிராக்டர்கள் மூலம் நிரப்பி வைக்கவும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், வருங்காலங்களில் மான்கள் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பது தடுக்கப்படும் என வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.