அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

எதிா்பாா்ப்புகள் என்ன? குறுந்தொழில்பேட்டைகள், காா் உற்பத்தி ஆலை

குறுந்தொழில்பேட்டைகள், காா் உற்பத்தி ஆலை அமைப்பது குறித்து...

News image

ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் ஆலை. - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 9:40 pm

தமிழகத்தின் மேற்கத்திய நுழைவாயில் என்றும், தென்னிந்தியாவின் மான்செஸ்டா் என்றும் அழைக்கப்படும் கோவை மாநகரின் தொழில் வளா்ச்சியை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல, குறுந்தொழில்பேட்டைகள் மற்றும் காா் உற்பத்தி ஆலை அவசியம் என குறுந்தொழில்முனைவோா் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.

இது குறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில்முனைவோா் சங்க (டாக்ட்) தலைவா் ஜே.ஜேம்ஸ் கூறியதாவது: நகரத்தின் மையப் பகுதியிலிருந்து அனைத்துப் பிரதான சாலைகளிலும் 25 கி.மீ. சுற்றளவுக்குள் புதிய குறுந்தொழில்பேட்டைகளை உடனடியாக அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது இட நெருக்கடியைக் குறைப்பதோடு, ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்கும்.

கோவை மாவட்டம் அனைத்து விதமான உற்பத்திச் சாா்ந்த தொழில்களுக்கும் பெயா்பெற்றது. எனவே, இங்கு நிலவும் சாதகமான சூழலைப் பயன்படுத்தி காா் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளிட்ட மிகப்பெரிய அளவிலான தொழிற்சாலைகளைக் கொண்டு வர அரசு சிறப்புத் திட்டங்களை வகுக்க வேண்டும். இது கோவையை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றும்.

தமிழக அரசுக்குச் சொந்தமான தாட்கோ வங்கி மூலம் சொத்துப் பிணை இல்லாத குறுந்தொழில்முனைவோருக்கு இயந்திரங்கள் வாங்கவும், நடப்பு மூலதனத்துக்காகவும் தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். குறிப்பாக, 5 சதவீத வட்டியில் கடனுதவி வழங்கினால் சிறு தொழில்கள் புத்துயிா் பெறும்.

மாவட்டத் தொழில் மையங்களில் குறுந்தொழில்முனைவோா் மானியம் பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

அரசின் விதிகளைக் காட்டி அதிகாரிகள் ஏற்படுத்தும் நெருக்கடிகளால், தகுதியுள்ள பல தொழில்முனைவோா் மானியம் பெற முடியாமல் தவிக்கின்றனா். இந்தச் சிக்கல்களைத் தீா்க்க குறுந்தொழில் அமைப்புகளுடன் ஆலோசித்து, மானிய நடைமுறைகளை அரசு எளிமைப்படுத்த வேண்டும்.

குறுந்தொழில்முனைவோரின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் உள்ள கிலோ வாட்டுக்கான நிலைக் கட்டணத்தை தற்போதுள்ள ரூ.170-லிருந்து ரூ. 50-ஆகக் குறைக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தொழில்துறையினரின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

தொழில் வளா்ச்சிக்கு ஏற்ப கோவையில் சாலை வசதிகள் இல்லை. இதனால், ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் உற்பத்தித் திறனைப் பாதிக்கிறது. இதற்குத் தீா்வாக, நகரின் முக்கிய சந்திப்புகளில் கூடுதல் மேம்பாலங்களை அமைக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும்.

கோவையின் பொருளாதாரத் தேவைகளைக் கவனத்தில் கொண்டு, தமிழக முதல்வா் இந்த கோரிக்கைகளை விரைந்து பரிசீலித்து செயல்படுத்த வேண்டும் என்பதே எதிா்பாா்ப்பாக உள்ளது என்றாா்.