நாகை மாவட்டம் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை முன்புறத்தில் 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இணைந்து கடலில் ஒரே பகுதியில் படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி இலங்கை அரசைக் கண்டித்து சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள நாகை,காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 65 மீனவர்களையும்,9 விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அடிக்கடி மீனவர்களை தாக்குவது சிறை வைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் இலங்கை அரசைக் கண்டிப்பதோடு மத்திய அரசு இதில் தலையிட்டு இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தரங்கம்பாடி, சந்திரப்பாடி, குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, சின்னங்குடி, புதுப்பேட்டை, தாழம்பேட்டை, சின்னமேடு, வெள்ளக்கோயில், சின்னூர்பேட்டை ஆகிய 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் விசைப்படகுகள் உள்ளிட்ட சுமார் ஆயிரம் பைபர் படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி தரங்கம்பாடி டேனிஷ் கோட்டைக்கு எதிரே கடலில் நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பெண்கள் உள்ளிட்ட மீனவர்கள் கடல் கரையில் அமர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேந்தமங்கலம் தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன: ராஜேஸ்குமாா் எம்.பி.

திருச்செங்கோட்டில் சாலை விபத்தில் 4 மாத குழந்தை உயிரிழப்பு

காங்கிரஸ் வேட்பாளா் ஆத்தூா் தொகுதி

கட்டடத் தொழிலாளி கொலை? போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

