தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பூட்டியிருந்த வீட்டுக்குள் 56 பவுன் நகை கொள்ளை

அறந்தாங்கியில் மளிகை கடை நடத்தி வருபவர் பழனி குமாரசாமி.இவர் நேற்று குடும்பத்துடன் வெளியில் சென்றார். இ ந் நிலையில் நேற்று இரவு அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 56 பவுன்

News image
Updated On :11 ஆகஸ்ட் 2013, 10:26 am

கவியழகன்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 56 பவுன் தங்க நகை, 7 கிலோ வெள்ளி பாத்திரங்கள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள வைரதோடு, ரூ.55 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை சனிக்கிழமை இரவு கொள்ளை போனது.

அறந்தாங்கி எல்.என்.புரத்தை சேர்ந்தவர் கந்தையா மகன் பழனிக்குமாரசாமி(52), இவர் கட்டுமாவடி முக்கத்தில் மளிகைகடை நடத்திவருகிறார். இவரது வீடு தென்றல் நகரில் உள்ளது. இவரது மனைவி தமிழ்ச்செல்வி(47) வெட்டிவயல் பள்ளியில் ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று பழனிக்குமாரசாமி கடையில் இருந்துள்ளார்,  தமிழ்ச்செல்வியும் அவரது மகனும் மாலையில் வெளியூர் சென்றுவிட்டு இரவு 9.50 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வெளி கேட் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் உள்ளே சென்று பார்த்த போது உள்கதவும் உடைக்கப்பட்டிருந்தது அப்போது இந்த பகுதியில் மின்சாரம் இல்லை,இவர்கள் வருவதை பார்த்த கொள்ளையர்கள் பின்பக்க கதவு வழியாக சுவர் ஏறி குதித்து தப்பிச்சென்றுவிட்டனர்.

வீட்டு பீரோவில் வைத்திருந்த 56 பவுன் தங்க நகைகள் மற்றும், 7 கிலோ வெள்ளி சாமான்கள்,ரூ.1 லட்சம் மதிப்புள்ள வைரத்தோடு, ரூ.55 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா கொள்ளை நடந்த வீட்டைபார்வையிட்டார். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.இச்சம்பவம் இப் பகுதி மக்களை பீதிக்குள்ளாக்கியது.இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.