நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து மத்திய பழங்குடியினர் நலன் மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் வி. கிஷோர் சந்திர தியோவுக்கு அவர் இன்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நரிக்குறவர் சமுதாயத்தினர் தமிழகத்தில் அதிமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்க்கை நிலை மோசமாக உள்ளது. அடிக்கடி தங்களது வசிப்பிடத்தை மாற்றிக் கொள்ளும் நிலை இருப்பதால் அவர்கள் வசிப்பதற்கு நிரந்தரமான இடம் இல்லை.இதனால், சமூக, கல்வி ரீதியாக அவர்கள் மற்ற சமூகத்தினரை விட பின்தங்கியுள்ளனர்.பழங்குடியினரைப் போன்ற நரிக்குறவர் சமூகத்தினருக்கு அவர்களுக்கு வழங்கப்படுவது சலுகைகளை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்தபோது நரிக்குறவர்களின் முன்னேற்றத்தில் மிகுந்த கவனம் செலுத்தினோம். கடந்த 1970-ஆம் ஆண்டு இவர்களுக்காக தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டது. இதனால் அவர்கள் ஒரே இடத்தில் குடியேறி வாழ்ந்தனர்.கடந்த 2008-09-ம் ஆண்டில் திமுக அரசால் நரிக்குறவர் நல வாரியம் அமைக்கப்பட்டு பல்வேறு விதமான நிதி உதவிகள் செய்யப்பட்டன.
குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக தங்களை பழங்குடியினர் பட்டியிலில் சேர்க்க வேண்டும் என நரிக்குறவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். வரலாற்றின் அடிப்படையில் அவர்கள் பழங்குடியினர் என்பதால் அவர்களை பழங்குடியினர் (எஸ்.டி.) பட்டியலில் சேர்க்க வேண்டும். தமிழகத்தில் நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியிலில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தச்சநல்லூரில் தவெக வாக்கு சேகரிப்பு

தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

அதிமுக வென்றதும் பயிா்க்கடன் தள்ளுபடி: தச்சை என்.கணேசராஜா

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி: தோ்தல் பொது பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


