சிதம்பரத்திலிருந்து கடலூருக்கு திங்கள்கிழமை இரவு புவனகிரி வழியாக செல்லும் தனியார் பஸ் புறப்பட்டது. அப்போது புவனகிரியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் பஸ்ஸில் ஏறியுள்ளனர். ஆனால் வண்டிகேட் பகுதிக்கு பஸ் சென்றதும் புவனகிரி பயணிகளை மட்டும் கீழே இறக்கிவிட்டு, சி.முட்லூர் புறவழிச்சாலை வழியாக சென்றது. இதனால் ஆத்திரமடைந்த புவனகிரி பகுதி மக்கள் இன்று காலை 8.30 மணிக்கு புவனகிரி வந்த தனியார் பஸ்ஸை கடைவீதியில் மறித்து சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அதன் பின்னர் வந்த மற்றொரு தனியார் பஸ்ஸையும் மறித்து சிறைபிடித்தனர். தகவல் அறிந்த போலீஸார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியக்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்கள் இரண்டையும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.