சிதம்பரத்தில் ஆட்டோ, மினிடோர் லாரி மற்றும் நடைபாதை கடைகளால் போக்குவரத்து நெருக்கடி
சிதம்பரம் நகரில் மொத்தம் 500க்கும் மேற்பட்ட ஆட்டோக்களும், நூற்றுக்கும் மேற்பட்ட மினிடோர் லாரிகளும் இயக்கப்படுகிறது. ஆட்டோ மற்றும் மினிடோர் லாரிகள் ஒருவழிப்பாதையை


சிதம்பரம் நகரில் ஆட்டோக்கள், மினிடோர் லாரி மற்றும் நடைபாதை கடைகளால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் நகரில் மொத்தம் 500க்கும் மேற்பட்ட ஆட்டோக்களும், நூற்றுக்கும் மேற்பட்ட மினிடோர் லாரிகளும் இயக்கப்படுகிறது. ஆட்டோ மற்றும் மினிடோர் லாரிகள் ஒருவழிப்பாதையை கடைபிடிப்பதில்லை. மேலும் மேலரதவீதி, தெற்குரதவீதியில் அதிக ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. இவர்கள் சவாரிக்காக இருபுறமும் சுற்றி, சுற்றி வருவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நடைபாதை ஆக்கிரமிப்பு: மேலவீதி மற்றும் தெற்குரதவீதியில் பாதி வீதிக்கு ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு ஆட்டோ நிறுத்தம் உள்ளது. இவையல்லாமல் நகரில் நான்கு வீதிகள் மற்றும் நான்கு சன்னதிகளிலும் உள்ள நடைபாதையில் கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. கீழரதவீதியில் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அங்கும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு்ள்ளது. நகரில் நான்குவீதிகளிலும் தள்ளுவண்டிகளில் பழம் மற்றும் பல்வேறு பொருள்கள் விற்கப்படுகிறது.வடக்குரதவீதியில் காலை வேளையில் மணல் ஏற்றி வரும் மாட்டு வண்டிகளும், மற்ற வேளையில் லாரிகள் இருபுறமும் நிறுத்தப்படுவதால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் நான்குவீதிகள், வேணுகோபால்பிள்ளைத்தெரு, போல்நாராயணன்தெரு, எஸ்.பி.கோயில்தெரு உள்ளிட்ட பகுதிகளை கடந்து செல்ல கடும் அவதிக்குள்ளாகுகின்றனர்.
குறிப்பாக நகரில் மேலரதவீதி, தெற்குரதவீதி, வேணுகோபால்பிள்ளைதெரு, எஸ்பி.கோயில்தெரு, போல்நாராயணன்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வணிக வளாகம், பல்பொருள் அங்காடிகள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் பார்க்கிங் வசதி இல்லாததால், கடைக்கு வருபவர்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே போக்குவரத்து காவல்துறையினர் நகரில் ஒரு வழிப்பாதையை அமல்படுத்தி வாகனங்கள் குறிப்பிட்ட இடத்தில் நிறுத்த பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும் என்பதை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...