எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது

சிதம்பரம் அருகே வரதட்சிணை கேட்டு மனைவியை அடித்து திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை மகளிர் போலீஸார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக மாமனார், மாமியார், மைத்துனர் உள்ளிட்ட

News image
Updated On :21 ஆகஸ்ட் 2013, 12:17 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே வரதட்சிணை கேட்டு மனைவியை அடித்து திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை மகளிர் போலீஸார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக மாமனார், மாமியார், மைத்துனர் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.

சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன். இவரது மனைவி உஷாராணி (27). இருவருக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் இடையே வரதட்சிணை கேட்டு கடந்த சில மாதங்களாக தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு கணவர் மணிகண்டன், மாமனார் கணேசன், மாமியார் தங்கம், மைத்துநர் செல்வராஜ் ஆகிய நால்வரும் சேர்ந்து உஷாராணியை அடித்து திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து உஷாராணி சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப் பதிந்து கணவர் மணிகண்டனை கைது செய்தார். மேலும் இது தொடர்பாக மாமனார், மாமியார் மற்றும் மைத்துனரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.