பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் ஊதிய தேக்க நிலை, ஊதியக்குறைப்பு நிவர்த்தி செய்ய வலியுறுத்துவது உள்ளிட்ட 27 கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் வண்டிகேட் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இன்று


பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் ஊதிய தேக்க நிலை, ஊதியக்குறைப்பு நிவர்த்தி செய்ய வலியுறுத்துவது உள்ளிட்ட 27 கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் வண்டிகேட் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வி.குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.டி.சம்பந்தம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் ஐ.எம்.காசிநாதன் தொடக்கவுரையாற்றினார். ஏ.ராஜசேகரன், ரகோத்தமன், கலியமூர்த்தி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் பங்கேற்றனர். கிளைச் செயலாளர் பி.சிதம்பரநாதன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...