பணம் கையாடல் செய்த கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 2 பேர் கைது

சிதம்பரம் கோட்ட அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தில் பணம் கையாடல் நடந்ததாக புகார் எழுந்தது.அதைத் தொடர்ந்து கூட்டுறவுச் சங்க அதிகாரிகள்
Updated on
1 min read

பணியாளர்கள் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் பணம் கையாடல் செய்ததாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.

சிதம்பரம் கோட்ட அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தில் பணம் கையாடல் நடந்ததாக புகார் எழுந்தது.அதைத் தொடர்ந்து கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் ஊழியர்கள் மூவரும், சங்க உறுப்பினர்கள் இருவர் என ஐந்து பேரும் சேர்ந்து ரூ.32 லட்சத்து 80 ஆயிரத்து 881 கையாடல் செய்தது தெரிந்தது.இது குறித்து கடலூர் வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸில் புகார் செய்யப்பட்டது.அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சங்க உறுப்பினர்கள் வேல்முருகன் (50), அசோகன் (48) ஆகியோரை கடந்த 22-ஆம் தேதி கைது செய்தனர்.

மேலும் ஊழியர்கள் இருவரையும், ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவரையும் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com