எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

திருக்கைலாயம் சென்று திரும்பிய 110 பேருக்கு பட்டம்: ஊரன் அடிகளார் வழங்கினார்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீகைலாஷ் மானசரோவர் ராஜ யாத்திரைக்குழு சார்பில் திருக்கைலாயம் சென்று திரும்பியவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா சனிக்கிழமை

News image
Updated On :25 ஆகஸ்ட் 2013, 10:44 am

G.Sundararaj

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீகைலாஷ் மானசரோவர் ராஜ யாத்திரைக்குழு சார்பில் திருக்கைலாயம் சென்று திரும்பியவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.விழாவில் திருக்கயிலாயம் சென்று வந்தவர்கள் 110 பேருக்கும், பாரத் பரிக்ரிமம் செய்தவர்களுக்கும் பட்டம் வழங்கப்பட்டது. முதல் முறை திருக்கைலாயம் சென்று வந்தவர்களுக்கு கயிலைமணி என்ற பட்டமும், இரண்டாம் ஆண்டு திருக்கைலாயம் சென்று வந்தவர்களுக்கு கயிலைநாதர் என்ற பட்டமும், மூன்றும், அதற்கு மேல் சென்று வந்தவர்களுக்கு கயிலைவாசி என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

விழாவிற்கு ஆடிட்டர் கே.நடராஜபிரபு தலைமை வகித்தார். கைலாஷ் யாத்திரைக்குழு ஒருங்கிணைப்பாளர் பி.பாலகிருஷ்ணன் வரவேற்றார். வடலூர் ஊரன்அடிகளார் விழாவில் பங்கேற்று திருக்கயிலாயம் யாத்திரை சென்று வந்தவர்களுக்கு பட்டங்களை வழங்கிப் பாராட்டினார். சித்தூர் நகரியைச் சேர்ந்த சிவானந்த யதீந்திர சுவாமி ஆசிரமம் ஸ்ரீலஸ்ரீ சுவாமி சரணானந்தா ஆசியுரை வழங்கினார். விருத்தாசலம் ஆர்.வைத்தியநாதன் நன்றி கூறினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கடலூர் ஆர்.சிவராமன், ஜி.மேகநாதன், டாக்டர் கே.நாராயணன், வி.கே.கணபதி, எம்.நாகராஜ் குருக்கள், தமிழ்நாடு நுகர்வோர் குழுமச் செயலர் சி.டி.அப்பாவு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.