எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

முதலை கடித்து இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.3லட்சம் நிதி: முதல்வருக்கு எம்எல்ஏ நன்றி

சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு ரயிலடி பகுதியைச் சேர்ந்த ஜோதிராஜன் (55) என்பவர் கடந்த 28-7-2013 அன்று முதலை கடித்து இறந்தார். அவரது குடும்பத்திற்கு தமிழக முதல்வர் பொது நிவாரண

News image
Updated On :25 ஆகஸ்ட் 2013, 12:46 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே முதலை கடித்து இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதிவழங்க உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு ரயிலடி பகுதியைச் சேர்ந்த ஜோதிராஜன் (55) என்பவர் கடந்த 28-7-2013 அன்று முதலை கடித்து இறந்தார். அவரது குடும்பத்திற்கு தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் நிதி வழங்கிட வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பினேன். கோரிக்கையினை ஏற்று மனித நேயத்துடன் பரிசீலித்து தமிழக முதல்வர் ஜோதிராஜன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவு பிறப்பித்தற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வீராணத்திலிரிருந்து பாசனத்திற்கு நீர் திறக்க உத்தரவிற்கு நன்றி: கடலூர் மாவட்டம் வீராணம்ஏரியிலிருந்து விவசாயிகள் நலன் கருதி பாசனத்திற்கு முன்னுரிமை அளித்து நீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி ஆக.22-ம் தேதி சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் எனது தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மேற்கண்ட பரிசீலித்த தமிழக முதல்வர் விவசாயிகள் நலன் கருதி ஆக.27-ம் தேதி ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீரை திறக்க பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பினால் விவசாயிகள் மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர். எங்களது கோரிக்கையை பரிசீலித்து ஏரியிலிருந்து நீரை திறந்துவிட உத்தரவு பிறப்பித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.